விஜய்யை போன்று மாஸ் பாடல் கேட்கும் ஜெயம்ரவி!

Bookmark and Share

விஜய்யை போன்று மாஸ் பாடல் கேட்கும் ஜெயம்ரவி!

நிமிர்ந்து நில் மாதிரி சமூகம் சார்ந்த படங்களிலும் அவ்வப்போது நடித்து வரும் ஜெயம்ரவி, இப்போது தனது அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிக்கும் தனி ஒருவன் படத்திலும் ஒரு அதிரடியான கதையில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதனால் இந்த படம் ஜெயம்ரவியின் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். அதேசமயம், தொடர்ந்து சீரியசான கதைகளில் நடித்து ரசிகர்களை போரடிக்கக்கூடாது என்று நினைக்கும் ஜெயம்ரவி, அவ்வப்போது கலகலப்பான கதைகளிலும் நடிக்க வேண்டும் என்றும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், தற்போது அவர் நடித்துள்ள ரோமியோ ஜூலியட், அப்பாடக்கர் என்ற இரண்டு படங்களுமே ஜாலியான படங்கள்தானாம். அதோடு, இந்த படங்களில் காமெடி காட்சிகளிலும் கலந்து கட்டி நடித்திருக்கும் ஜெயம்ரவி, பாடல் காட்சிகளிலும் நடிகைகளுடன் இணைந்து அதிரடி ஆட்டம் போட்டிருக்கிறாராம்.

குறிப்பாக, சுராஜ் இயக்கத்தில் நடித்துள்ள அப்பாடக்கர் படத்தில் அஞ்சு பைசா பத்து பைசா வட நானு -என்ற பாடலில் ஒரு மும்பை அயிட்டம் நடிகையுடன் ஆடியிருக்கும் ஜெயம்ரவிக்கு அந்த பாடல் ரொம்பவே பிடித்துள்ளதாம்.

அதனால் தனது புதிய படங்களின் டைரக்டர்களிடம் பாடல்களில் அதிக கவனம் செலுத்த சொல்லும் அவர், விஜய்க்கு எழுதுவது போன்று மாஸ் பாடல்களை படத்தில் வையுங்கள் என்றும் கேட்டுக்கொண்டு வருகிறார்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions