விஜய், கமல் சசிகலாவால் மிரட்டப்பட்டார்களா? திடுக்கிடும் தகவல்

Bookmark and Share

விஜய், கமல் சசிகலாவால் மிரட்டப்பட்டார்களா? திடுக்கிடும் தகவல்

கமல்ஹாசன் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். தன் வேலைகளை செய்து வந்தாலும் சமூகத்தில் நடக்கும் விஷயங்களை கவனித்து வருவதோடு தன்னுடைய கருத்துக்களையும் பதிவு செய்துவருகிறார்.

அதிலும் இப்போது நடக்கும் அரசியல் நிலை குறித்து தனது கருத்தை வெளியிட்டார். இவர் சில விஷயங்களை வெளியே சொல்ல முடியாமல் சொல்லி வருகிறார். ஆனால் அதன் பின் நடந்த உண்மை காரணங்கள் இப்போது வெளிவரத்தொடங்கியுள்ளது.

கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் வெளிவர பல தடைகள் இருந்தது. அந்த நேரத்தில் கமலுக்கு நிறைய மிரட்டல்கள் வந்தது. எதையும் சொல்ல முடியாமல் நான் நாட்டை விட்டே போகிறேன் என அவர் சொன்னார். ஆனால் அந்நேரத்தில் இது தெரியாமல் பலரும் கமலை திட்டினார்கள்.

மேலும் 2006 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போது அவரை தமது கட்சிக்கு ஆதரவாக வரச்சொல்லி 200 கோடி விலை பேசினார்களாம். இதையெல்லாம் மனதில் வைத்து தான் கமல் இப்போது தனது கருத்தை வெளியிட்டுவருகிறார் என சொல்லப்படுகிறது.

இதுபோல விஜய்க்கும் விஜயின் படங்கள் பலவற்றிற்கு சோதனை வந்தது. அதிலும் குறிப்பாக தலைவா படம் வெளியாக இருக்கும் நேரத்தில் நடந்த விஷயங்களை விஜயால் மறக்கமுடியாது. இதற்கெல்லாம் காரணம் மக்கள் இப்போது எதிர்க்கும் அந்த கும்பல் தான் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions