வரிவிலக்கு விஷயத்தில் விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு...!

Bookmark and Share

வரிவிலக்கு விஷயத்தில் விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு...!

ஏப்ரல் 1 ஆம் தேதி கார்த்தி நடித்த கொம்பன் படம் வெளியானது. ஏப்ரல் 2 ஆம் தேதி உதயநிதி, நயன்தாரா நடித்த நண்பேன்டா படமும், விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த சகாப்தம் படமும் வெளியாகின.

இவற்றில் கொம்பன் படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் அப்படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை. உதயநிதி நடித்த நண்பேன்டா படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்தாலும்... வரிவிலக்கு அளிப்பதற்கு சிபாரிசு செய்யும் குழுவினர் படம் பார்த்துவிட்டு வரிவிலக்கு வழங்க தகுதியற்ற படம் என்று சான்றிதழ் கொடுத்துவிட்டனர்.

எனவே நண்பேன்டா படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை. மற்றொரு படமான சகாப்தம் படத்துக்கு யு சான்றிதழ்தான் வழங்கப்பட்டது. ஆனாலும் சகாப்தம் படத்துக்கு வரிவிலக்கு கேட்டு விண்ணப்பிக்கவில்லை.

என்னதான் வரிவிலக்கு குழு படத்தைப் பார்த்தாலும் தன் மகன் நடித்த படத்துக்கு நிச்யமாக வரிவிலக்கு தர மாட்டார்கள் என்பதால் சகாப்தம் படத்துக்கு வரிவிலக்கு கேட்டு விண்ணப்பிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் விஜயகாந்த்.

இவர் இப்படி என்றால்.... உதயநிதியோ தன் படத்துக்கு வரிவிலக்கு ஏன் கொடுக்கவில்லை என்று நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார்.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions