க்ளீன் இந்தியா இயக்கத்தில் விஜய்!

Bookmark and Share

க்ளீன் இந்தியா இயக்கத்தில் விஜய்!

பிரதமர் நரேந்திர மோடியின் க்ளீன் இந்தியா இயக்கத்தில் பல பாலிவுட்  நட்சத்திரங்கள் தெருவில் துடைப்பத்துடன் இறங்கி தூய்மை செய்தனர். ஒரு பக்கம் இதை விளம்பரம் என்று விமர்சனம் செய்தாலும் தூய்மையாக இருக்க வேண்டும் என்கிற கருத்து விழிப்புணர்வின் விளம்பரமாக இருக்கட்டுமே என்று நட்சத்திரங்கள் கூறினார்கள். இது நல்லநோக்கம் கொண்ட  இயக்கம்  என்று தெரிந்தாலும் அரசியல் நிறம் வந்துவிடுமோ என்றே நட்சத்திரங்கள் தயங்குகிறார்கள். நம்மூரில் கமல், த்ரிஷா,  ஆதி  போன்ற சில நட்சத்திரங்கள் துணிச்சலுடன் அதரவு தந்தனர் வைரமுத்துவும் ஆதரித்தார்.

இதில் இப்போது நடிகர் விஜய்யும் இணைந்துள்ளார். நேரடியாக துடைப்பத்துடன் தெருவில் இறங்குவதற்குப் பதிலாக ஒரு வீடியோ கேம் வடிவில் இறங்குகிறார். க்ளீன் இந்தியா என்கிற இந்த வீடியோ கேம் அவரது பிறந்த நாளான ஜூன் 22 முதல் அறிமுகமாகிறது. இந்த  கேம்மில் விஜய் துடைப்பத்துடன் சென்னையில் தொடங்கி இந்தியாவின் முக்கிய நகரங்களை சுத்தம் செய்வது போல வடிவமைக்கப்பட்டு இருக்கிறதாம்.

கத்தி கேமை உருவாக்கியவர்களே இதையும் வடிவமைத்துள்ளார்கள். இது விஜய்யின் அனுமதியோடும் சம்மதத்தோடும் வடிவமைக்கப்பட்டு வெளியாகிறது. வீடியோ கேம் அதை விளையாடுபவர்களை அடிமையாக்கி விடுவதால் அது ஒரு கெட்ட சக்தியாக பார்க்கப்படுகிறது. ஆனால் தூய்மைக்கு அடிமையாவது தவறல்ல என்கிறார்களோ?


Post your comment





Related News
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions