கத்தி பாணியில் பைரவாவிலும் காய்ன் சண்டைக்காட்சி!

Bookmark and Share

கத்தி பாணியில் பைரவாவிலும் காய்ன் சண்டைக்காட்சி!

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் புதிய படம் பைரவா. இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இப்படத்தின் 85% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம்.

இரண்டு பாடல் காட்சி மற்றும் ஒரு சண்டைக்காட்சி மட்டுமே பாக்கியுள்ளது.இதில் ஒரு பாடல் காட்சி இன்றுமுதல் சென்னையில் படமாகவுள்ளது. திருவிழாவில் நடைபெறுவது போன்ற இந்த பாடலுக்காக திருவிழா போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று தயாராகியுள்ளது. இதைதொடர்ந்து ஒரு சண்டைக்காட்சி இதே இடத்தில் படமாகவுள்ளது.

இந்த சண்டைக்காட்சி, கத்தி படத்தில் வரும் காய்ன் சண்டைக்காட்சி போல பெரிதளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது. எப்படியும் நவம்பர் இறுதிக்குள் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டீசர் தீபாவளியில் வெளிவந்து படம் பொங்கலுக்கு திரையை தொடுவது உறுதி.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions