விஜய் ஜோடியாக நடிப்பதில் மகிழ்ச்சி: கீர்த்தி சுரேஷ்

Bookmark and Share

விஜய் ஜோடியாக நடிப்பதில் மகிழ்ச்சி: கீர்த்தி சுரேஷ்

'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்திசுரேஷ் தமிழ் பட உலகின் முக்கிய இடத்தை பிடித்து வருகிறார். 

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ரஜினிமுருகன்' படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த கீர்த்திசுரேஷ் அடுத்து 'ரெமோ' என்ற படத்தில் மீண்டும் அவரது ஜோடியாக நடித்து வருகிறார். இது தவிர தனுசுடன் ஒரு படம், பாபி சிம்ஹாவுடன் 'பாம்பு சட்டை' ஆகிய படங்களில் நடிக்கிறார். 

இந்த நிலையில் 'தெறி' படத்தை அடுத்து விஜய் நடிக்கும் அவரது 60–வது படத்தில் அவருடன் நடிக்க கீர்த்திசுரேஷ் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். விஜய்யுடன் ஜோடி சேர்வதால் அவருக்கு, ரசிகர்களும் திரை உலகினரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதால் கீர்த்தி சுரேஷ் அளவு கடந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார். 

இது பற்றி கூறிய அவர், "விஜய்சாருடன் இணைத்து நடிக்கப்போவதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். படம் தொடங்கும் நாளுக்காக கார்த்திருக்கிறேன். ஆவலை அடக்க முடியவில்லை. ஆதரவாளித்த அனைவருக்கும் நன்றி" என்றார். 

'பிரபல நடிகைகளுக்கே விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காத போது, 2 படங்கள் மட்டும் வெளியாகியுள்ள நிலையில் கீர்த்தி சுரேசுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது அவரது அதிர்ஷ்டம் என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.


Post your comment





Related News
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions