மீண்டும் மதுரை பக்கம் வரும் விஜய்

Bookmark and Share

மீண்டும் மதுரை பக்கம் வரும் விஜய்

விஜய் தற்போது நடித்து வரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு அநேகமாக இந்த மாத இறுதிக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் பாடல் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க உள்ளார்கள்.

அதன் பின் இறுதிக்கட்டப் பணிகளுக்காக சுமார் மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டு ஆகஸ்ட்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்தப் படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

விஜய் ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடிக்க உள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் இப்படத்திற்காக பாடல்கள் பதிவு ஏற்கெனவே முடிவடைந்துவிட்டதாம். மே மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி பொங்கலுக்கு வெளியாகும் விதத்தில் தயாரிக்கப்படலாம் என்கிறார்கள்.

இந்தப் படத்தை அடுத்து சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் உருவாக உள்ளது என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகுமார், விஜய்யை எப்போதோ சந்தித்து கதையைச் சொல்லி சம்மதம் வாங்கிவிட்டார்.

அந்தப் படத்தில் நடிக்க விஜய் மிகவும் ஆர்வமாக இருக்கிறார் என்று அப்போதே தகவல்கள் வெளியாகின. சசிகுமார் தற்போது 'தாரை தப்பட்டை' படத்தைத் தயாரித்து பாலா இயக்கத்தில் நாயகானகவும் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை முடித்து வெளியீட்டு வேலைகள் நிறைவடைவதற்கும், விஜய்யின் படத்தை ஆரம்பிப்பதற்கும் சரியாக இருக்கும் என்கிறார்கள். படத்தின் கதை கண்டிப்பாக மதுரைப் பின்னணியில்தான் இருக்கும் என்கிறார்கள்.

ஏனென்றால் சசிகுமார் மதுரைப் பின்னணியில் முதன் முறையாக இயக்கிய 'சுப்பிரமணியும்' படம் மாபெரும் வெற்றி பெற்றதும், அந்த அளவுக்கு பவர்ஃபுல்லான ஒரு கதையைத்தான் விஜய் எதிர்பார்க்கிறார் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

முதல்ல விஜய் நடிக்கிற 'புலி' முடிஞ்சி பிரச்சனையில்லாம வெளிவரட்டும், அதுக்குள்ள புலிப் பாய்ச்சல்ல அடுத்த படத்துக்கு அடுத்த படத்தைப் பற்றி கோலிவுட்டுல பேச ஆரம்பிச்சிட்டாங்களே... அவங்களை என்னான்னு சொல்றது...


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions