தனி ஒருவன் அரவிந்த்சாமி கதாபாத்திரம் போல் விஜய்யின்-60 படத்தில் வில்லனாக மம்முட்டி!

Bookmark and Share

தனி ஒருவன் அரவிந்த்சாமி கதாபாத்திரம் போல் விஜய்யின்-60 படத்தில் வில்லனாக மம்முட்டி!

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 60 படத்தில் வில்லனாக மம்முட்டியும், தங்கையாக மியா ஜார்ஜும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஜில்லா படத்தில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடித்த விஜய் இந்தப் படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. தெறியைத் தொடர்ந்து பரதன் இயக்கத்தில் தனது 60 வது படத்தில் விஜய் நடிக்கிறார்.

துப்பாக்கி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து 3 வது முறையாக இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால் ரொமான்ஸ் பண்ணப் போவதாக கூறுகின்றனர். இதற்காகத் தற்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அமரகாவியம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான மியா ஜார்ஜ் இந்தப் படத்தில் விஜய்யின் தங்கையாக நடிக்க, மற்றொரு முக்கியமான வேடத்திற்கு காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷை கேட்டிருக்கின்றனராம்.

இந்தப் படத்தில் வித்தியாசமாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை வில்லனாக நடிக்க படக்குழுவினர் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான தனி ஒருவன் ஹிட்டடித்ததால் அதே பாணியில் மம்முட்டியை களமிறக்குகிறது விஜய் 60 படக்குழு.

மேலும் இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் தனது மார்க்கெட் கோலிவுட்டில் உயரும் என்று மம்முட்டியும் நம்புகிறாராம்.இதற்காக 2 மடங்கு அதிகமான சம்பளம் அவருக்கு கூடுதலாக தரப்படவுள்ளதாம்.

ஏற்கனவே ஜில்லா படத்தில் மற்றொரு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து விஜய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் மம்முட்டி வில்லனாக நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தல அஜித்தின் அடுத்த பட வாய்ப்பை தட்டி பறித்தாரா கமல்? - வைரலாகும் தகவல்.!
விஜய் 60 ஃபர்ஸ்ட் லுக் லீக்கானது!
‘விஜய் 60’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?
விஜய் 60-யில் நெல்லை பாஷையில் அசத்தியிருக்கும் விஜய்!
விஜய் 60 பட ஹீரோயினுக்கு திடீர் விபத்து!
பொள்ளாச்சியில் முகாமிடும் விஜய்!
விஜய் 60 வியாபாரம் தொடங்கியது!
விஜய் படத்திற்கு தலைப்பு உங்க வீட்டு பிள்ளையா?
தீபாவளியில் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய் 60 படக்குழு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions