
கோலிசோடா என்ற பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த விஜய் மில்டன், விக்ரமை வைத்து ‘10 எண்றதுக்குள்ள’ படத்தை இயக்கினார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.
இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தை அடுத்து ராஜகுமாரனை கதாநாயகனாக வைத்து படம் இயக்க தொடங்கினார். இதில் வில்லனாக பரத் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராஜகுமாரன் இப்படத்தில் புலிவேஷம் போடும் தெருக்கூத்து கலைஞராக நடித்து வருகிறாராம்.
இதற்காக திருநெல்வேலி, சிவகிரி, கள்ளக்குறிச்சி பகுதிகளில் இருந்து நிஜமான புலிக்கலைஞர்களை வரவழைத்து, ராஜகுமாரனுக்கு பயிற்சி கொடுத்துள்ளனர். சுமார் 3 மாதங்கள் வரை பயிற்சி எடுத்துக் கொண்ட பின்னரே இப்படத்தில் ராஜகுமாரன் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்திற்கு ‘கடுகு’ என பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 9 ம் தேதி முதல் இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளை படமாக்க விஜய் மில்டன் திட்டமிட்டிருக்கிறார். 'கடுகு' படத்தின் டப்பிங் பணிகளும் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Post your comment