எம்.ஜி.ஆர். பட ரீமேக்கில் விஜய்?

Bookmark and Share

எம்.ஜி.ஆர். பட ரீமேக்கில் விஜய்?

விஜய் தற்போது ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. மார்ச் மாதம் பாடல்களும் ஏப்ரல் மாதம் படத்தையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இப்படத்திற்குப் பிறகு விஜய், பரதன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். பரதன் இயக்கிய ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அதுபோல் புதிய படத்திலும் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

எம்.ஜி.ஆர் நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' என்ற படத்தை தயாரித்த விஜயா புரடொக்‌ஷன்ஸ் நிறுவனம்தான் இந்த படத்தையும் தயாரிக்கின்றது.

எனவே இந்த படம் 'எங்க வீட்டு பிள்ளை' படத்தின் ரீமேக் என்றும் தற்போதுள்ள இளைஞர்களுக்கேற்ப இந்த படத்தின் திரைக்கதை மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டு பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆர் கோழையாக ஒரு வேடத்திலும், வீரனாக ஒரு வேடத்திலும் நடித்திருப்பார். இந்த கதை விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என்று பரதன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions