விஜய்யோடு ஜோடி சேரும் மியா ஜார்ஜ்?

Bookmark and Share

விஜய்யோடு ஜோடி சேரும் மியா ஜார்ஜ்?

விஜய் தற்போது தனது 59-வது படமாக அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன், சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து தனது 60-வது படமாக பரதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். 

இப்படத்திற்கான கதாநாயகி தேடுதல் வேட்டை சமீபகாலமாக நடந்து வந்தது. இப்படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாகவும், இதற்காக காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டது. 

ஆனால் தற்போது, ‘அமரகாவியம்’, விஷ்ணு நடிப்பில் வெளிவந்த ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் நடித்த மியா ஜார்ஜ், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ‘காக்காமுட்டை’ நாயகி ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரதன் ஏற்கெனவே விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ்மகன்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions