விஜய்மில்டன் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் !

Bookmark and Share

விஜய்மில்டன் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் !

கோலிசோடாவை இயக்கியவர் விஜய்மில்டன். சினிமாவில் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியுள்ள இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு பரத்தை வைத்து அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்றொரு படத்தை முதன்முறையாக இயக்கினார். ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை.

அதனால் அதையடுத்து அவர் கால்சீட் கேட்டபோது முன்னணி ஹீரோக்கள் யாரும் அவருக்கு கால்சீட் தரவில்லை. அதனால் பின்னர் இளவட்ட பசங்களை வைத்து கோலி சோடாவை இயக்கி மெகா ஹிட்டாக கொடுத்தார். அந்த படம் பல முன்னணி நடிகர்களை பாதித்தது போன்று விக்ரமையும் பாதித்ததால் உடனே கால்சீட் கொடுத்தார்.

அப்படி விக்ரம்-விஜய்மில்டன்  கூட்டணியில் உருவாகியிருக்கும் படம்தான் பத்து எண்றதுக்குள்ள. இந்த படத்தில் விஜய் மில்டனுடன் ஒர்க் பண்ணியது விக்ரமுக்கு ரொம்ப பிடித்து விட்டதாம்.

அதனால், பத்து எண்றதுக்குள்ள படத்தை அடுத்து கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கும் அவர், அதற்கடுத்து மீண்டும் விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions