விக்ரமுன் சண்டை போட முடியாது - விஜய் மில்டன்

Bookmark and Share

விக்ரமுன் சண்டை போட முடியாது - விஜய் மில்டன்

'கோலி சோடா' படத்திற்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கி வரும் படம் 'பத்து எண்ணுறதுக்குள்ளே'. இந்தப் படத்தில் விக்ரம், சமந்தா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இதுவரை நான் நடித்த படங்களிலேயும், கதாபாத்திரங்களிலும் மிகவும் வித்தியாசமான படம் இது என சமந்தா புகழ்ந்து தள்ளும் படம் இது.

ஆனால், கடந்த சில வாரங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நின்று விட்டதாகவும், அதனால் படம் எப்போது வெளிவரும் என்று தெரியாது என்றும் வதந்தி பரவியது.

மேலும் படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும், நாயகன் விக்ரமுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், அதனால்தான் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது என்றும் சொன்னார்கள்.

ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடந்தது போலத் தெரியவில்லை. இப்படத்தின் பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகள் ஆரம்பமாகி படத்தின் முதல் பாதி வரை முடித்து விட்டதாகவும், மீண்டும் இரண்டாம் பாதி வேலைகளை இசையமைப்பாளர் இமான் திங்கள் முதல் செய்யவிருக்கிறார் என்றும் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.

மேலும் படத்தின் கிளைமாக்ஸ் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை மட்டுமே இன்னும் படமாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதோடு, விக்ரமின் கைகள் என் கைகளை விட பலம் வாய்ந்தவை, அதனால் அவருடன் சண்டை போட முடியாது.

முருகதாஸ் சார் இருந்தாலும் டிரை பண்ணுகிறேன்,” என கிண்டலான பதிவு ஒன்றையும் தன்னுடைய டிவிட்டரில் போட்டிருக்கிறார்  படத்தின் இயக்குனர் விஜய் மில்டன்.


Post your comment





Related News
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions