விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்

Bookmark and Share

விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்

விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் வந்த சர்ச்சைகளால் பரபரப்புகள் தொடங்கிவிட்டது. அவரின் பிறந்த நாளை ஒட்டி வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்தது. அவரின் சாதனையும் அடுத்தடுத்து தொடர்ந்து வருகிறது.

ரசிகர்களும் மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார்கள். அவரின் அடுத்த படம் மீண்டும் அட்லீயுடன் தான் என சொல்லப்படுகிறது. இவர் விஜய் நடித்த மெர்சல் படத்தை இயக்கி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தவர்.

மெர்சல் பல சாதனைகளை செய்தது. இந்நிலையில் தற்போது அது தொடர்ந்து வருகிறது. அண்மையில் இப்படம் BIFAN திரை விழாவில் Best Of Asian Cinema என்ற சிறப்பை பெற்றது. இதனை ரசிகர்கள் மீண்டும் MERSAL DECLARED ASIAS BEST என கொண்டாடிவருகிறார்கள். ட்விட்டரில் டாப் டரெண்டிங்கில் இது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions