விஜய்க்கு அப்படி இருந்தால் பிடிக்காது? நடிகர் நட்டியின் உண்மை

Bookmark and Share

விஜய்க்கு அப்படி இருந்தால் பிடிக்காது? நடிகர் நட்டியின் உண்மை

இளையதளபதி விஜய்யை பலருக்கும் பிடிக்க சில முக்கிய காரணங்கள் உண்டு. அதை நேரடியாக பார்த்தவர்கள் பலரும் சில நேரங்களில் பகிர்வதுண்டு.சமீபத்தில் வெளியான போங்கு திரைப்படத்தின் நடிகர் நட்டி விஜய் பற்றி சில சுவாரஸியமான விசயங்களை ஒரு பேட்டியில் எடுத்து சொன்னார்.

அவர் பேசிய போது விஜயை பற்றி நிறைய சொல்லலாம். தங்கமான மனிதர்.சிலருக்கு தெரிந்து அவர் சில உதவிகளை செய்கிறார். ஆனால் தெரியாமல் பலவற்றை செய்து வருகிறார். அவருக்கு அருமையான நகைச்சுவை திறன் உள்ளது.

பொதுவாக அவர் ஷூட்டிங்கில் அமைதியாக தான் இருப்பார்.ஆனால் எல்லாவற்றையும் கவனித்து கொண்டே இருப்பார். இதில் என்ன செய்யவேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும் என அவர் தயாராகி விடுவார்.

நான் அவரை வீட்டிலும் பார்த்துள்ளேன்.கலகலப்பாக இருப்பார். நட்பை பொறுத்தவரை மற்றவர்கள் கஷ்டப்பட்டால் அவருக்கு பிடிக்காது.

யாரும் ஒரு மாதிரி சோகமாக இருந்தால் அவருக்கு உடனே என்ன என கேட்பார்.அவர் அப்படி கேட்டுவிட்டு போனால் பிரச்சனை என்ன என்பது உடனே அவர் காதுக்கு போய்விடும். உடனடியாக உதவி செய்வார் என நட்டி கூறினார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions