தெறியில் விஜய்க்கு ஈடான பாராட்டுகளை வாங்கிய நைனிகா!

Bookmark and Share

தெறியில் விஜய்க்கு ஈடான பாராட்டுகளை வாங்கிய நைனிகா!

நேற்று வெளியான தெறி டிரெய்லரில் விஜய்க்கு ஈடாக, மீனாவின் மகள் நைனிகா அசத்தி விட்டார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

விஜய்-அட்லீ கூட்டணியில் உருவான தெறி படத்தின் 2 நிமிட டிரெய்லர் நேற்று வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 2 ஹீரோயின்கள் இருந்தபோதிலும் கூட விஜய்யின் மகளாக நடித்திருக்கும் நைனிகா நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

விஜய் 3 வது முறையாக காக்கி மாட்டியிருக்கும் தெறி படத்தின் 2 நிமிட டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. சத்யம் திரையரங்கில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.

இந்தப் படத்தில் விஜயகுமார், ஜோசப், தர்மேஸ்வர் என 3 விதமான தோற்றங்களில் விஜய் நடித்திருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக சமந்தாவும், அம்மாவாக ராதிகாவும் நடித்துள்ளனர். விஜய்யின் மகள் நைனிகாவிற்கு ஆசிரியையாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

தெறி டிரெய்லர் வெளியாகி 14 மணி நேரங்களில் 11,47,643 பார்வைகளை இணையத்தில் கடந்துள்ளது. மேலும் 1,23,969 பேர் இந்த டிரெய்லர் தங்களுக்குப் பிடித்திருப்பதாக லைக் செய்திருக்கின்றனர். அதேபோல இந்த டிரெய்லர் தங்களைக் கவரவில்லை என 9798 பேர் டிஸ்லைக் செய்துள்ளனர்.

டிரெய்லரில் மீனாவின் மகள் நைனிகா விஜய்க்கு ஈடாக நடிப்பில் அசதி விட்டார். எனக்கு எல்லாமே ஜோசப் தான் என்று இவர் பேசும் வசனம் விஜய் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து விட்டது. இதனால் விஜய்க்கு ஈடாக நைனிகாகாவிற்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions