பத்தரைக்கே நல்ல நேரம் ஸ்டார்ட்! வரலாம், வரலாம் வா- விஜய் அரசியல் வியூகம்!

Bookmark and Share

பத்தரைக்கே நல்ல நேரம் ஸ்டார்ட்! வரலாம், வரலாம் வா- விஜய் அரசியல் வியூகம்!

இப்போ வந்த ராகவா லாரன்சுக்கே அரசியல் ஆசை வந்து எப்படியாவது ஆட்சியில் அமர விரும்புகிறார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், நீண்ட காலமாக அதற்கு பல்ஸ் பார்த்துக்கொண்டே இருக்கும் விஜய்க்கு இருக்காதா?

எப்போ அரசியல் ஆசை வெளிவந்ததோ, அப்போதே அவரின் படங்களுக்கு இடைஞ்சல் வந்தது. எதுக்கு இடைஞ்சல் வருதுன்னே தெரியாது. தலைவா படத்தில் ஆரம்பித்தது.

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் பன்ச் வசனங்களை கூட பேச மறுத்தார். படத்தில் கொஞ்சம் பன்ச் அரசியல் கலந்து இருந்தால், அவ்வளவு தான். மாத்துங்கன்னு சொல்லும் அளவுக்கு வெறுத்து இருந்தார்.

ஆனால், ரசிகர் மன்ற தலைவர்கள் வந்து பேசும்போது. நேரம் வரும் சொல்லுறேன்னு சொல்லிட்டே இருந்தார்.

இப்போ அதுக்கு நேரம் வந்துட்டு போலிருக்கு.அட்லீ இயக்கும் தன் 61 வது படத்தின் ஷூட்டிங் சென்னை உத்தண்டியில் தான் நடந்துவருகிறது. இவர் இப்போது மத்தியான நேரங்களில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்க ஆரம்பித்துள்ளார்.

நேரம் வரும்ன்னு சொன்னது பிப்ரவரி 14 ந் தேதி காலை பத்தரை மணின்னு நினைக்கும் போது…இதற்குத்தானா காத்திருந்தாய் பாலகுமாரா?


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions