விஜய் பட இயக்குனருடன் அஜித் மெகா கூட்டணி - உறுதியான தகவல்.!

Bookmark and Share

விஜய் பட இயக்குனருடன் அஜித் மெகா கூட்டணி - உறுதியான தகவல்.!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கி வருகிறார் தல அஜித், இவர் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வில்லை என்றாலும் இவர் மீது ரசிகர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை யாருக்கும் மதிப்பு குறைவதில்லை.

இவர் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாகநயன்தாரா நடிக்க டி.இம்மான் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தை அடுத்து விஜயை வைத்து போக்கிரி படத்தை இயக்கிய பிரபு தேவாவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நமக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் பிரபு தேவா அஜித்திற்காக ஒரு கதையை உருவாக்கி அவரிடம் கூறியுள்ளார்.

அஜித்திற்கு கதை மிகவும் பிடித்து போயுள்ளது, இதனால் தல செமயான ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணுங்க. நாம இணைந்து படம் பண்ணலாம் என கூறியுள்ளார். இதனையடுத்து பிரபு தேவாவும் ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளாராம்.

மேலும் இவர்கள் இணையும் படத்தை நயன்தாராவின் மேனேஜர் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
மாமியாராக மாறிய தேவயானி
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions