விஜய்யை இயக்க தயராகும் பிரபுதேவா!

Bookmark and Share

விஜய்யை இயக்க தயராகும் பிரபுதேவா!

நடன மாஸ்டராக இருந்து கதாநாயகனான பிரபுதேவா, பின், இயக்குனராகி தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமின்றி, இந்தி சினிமாவிலும் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராகி விட்டார். 

இந்நிலையில், கடைசியாக, அவர் இந்தியில் இயக்கிய, ஆக் ஷன் ஜாக்சன் படம், தோல்வியடைந்ததால், தற்போது அவர் பிரபுதேவா ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனத்தை துவங்கி, மூன்று படங்களை தயாரித்து வருகிறார். 

அத்துடன், விஜய்யை வைத்தும் ஒரு படத்தை தயாரித்து, இயக்க உள்ளாராம். ஏற்கனவே, விஜய்யை வைத்து, போக்கிரி மற்றும் வில்லு படங்களை இயக்கிய பிரபுதேவா, இப்படத்தை அதிரடி ஆக் ஷன் கதையில் இயக்கவுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions