விஜய் அண்ட் விஜய்...! பிரபுதேவாவின் அடுத்த மூவ்!

Bookmark and Share

விஜய் அண்ட் விஜய்...! பிரபுதேவாவின் அடுத்த மூவ்!

டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர்... என பன்முகம் கொண்டவர் பிரபுதேவா. தென்னிந்திய படங்களை இயக்கி வெற்றி பெற்ற பிரபுதேவா, பாலிவுட்டிற்கு சென்றார். அங்கு அவரது படங்கள் வெற்றி பெற பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநராக வலம் வந்தார்.

ஆனால் கடைசியாக அவர் இயக்கிய படம் சரியாக போகாததால் இப்போது மீண்டும் தென்னிந்திய பக்கமே திரும்பியிருக்கிறார். விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவும், விஜய்யின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார் பிரபுதேவா.விஜய்யை வைத்து 'போக்கிரி' எனும் மாஸ் ஹிட் படத்தை கொடுத்த பிரபுதேவா, மீண்டும் விஜய்யுடன் 'வில்லு' படத்தில் இணைந்தார்.

ஆனால் இந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில், இப்போது மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க போகிறாராம் பிரபுதேவா.

விஜய்யிடம், பிரபுதேவா ஒரு அதிரடியான ஆக்ஷ்ன், காதல் கம் காமெடி கதையை சொல்லியிருப்பதாகவும், அந்த கதை விஜய்க்கும் பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது புலி படத்தை முடித்துவிட்ட விஜய், கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதன்பிறகு பிரபுதேவா படத்தில் நடிக்கலாம் என்கிறார்கள்.

இந்த இடைவெளியில், இயக்குநர் விஜய்யின் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் பிரபுதேவா. தற்போது, ’இது என்ன மாயம்’ படத்தை முடித்திருக்கும் விஜய், அடுத்தபடியாக ஒரு கதையை தயார் செய்து அதை பிரபுதேவாவிடம் கூறியிருக்கிறார்.

அந்த கதை பிரபுதேவாவுக்கும் பிடித்து போக அவரும் நடிக்க சம்மதம் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. ஆக, விஜய் அண்ட் விஜய் உடன் பிரபுதேவா இணைய இருக்கும் படம் பற்றிய அறிவிப்பு  விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions