விஜய்-பிரபுதேவாவுக்காக குஷ்பு செய்த தியாகம்!

Bookmark and Share

விஜய்-பிரபுதேவாவுக்காக குஷ்பு செய்த தியாகம்!

மும்பையில் பிறந்தவரான நடிகை குஷ்பு 1980களில் இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர். ஆனால் 1988ல் ரஜினி- பிரபு நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் ஹீரோயினியாக நடித்தார்.

அதன்பிறகு வருசம்16, வெற்றி விழா, கிழக்கு வாசல், சின்னதம்பி என தொடர்ந்து வெற்றி படங்களாக அமைந்ததால் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகி விட்டார் அவர்.

அதோடு, தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் குஷ்பு. ரஜினியுடன் அண்ணாமலை, கமலுடன் சிங்கார வேலன் என மெகா ஹீரோக்களுடன் நடித்து மேல்தட்டு நடிகையாக வலம் வந்த அவர், டைரக்டர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட பிறகு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறியதோடு, தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.

அந்த வகையில் சினிமாவில் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலாக கலைச்சேவை செய்து வருகிறார் குஷ்பு. ஆனால், எத்தனை பெரிய டைரக்டரின் படமாக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அவர் அரிதாரம் பூசவே மாட்டாராம்.

அன்று முழுக்க ஓய்வெடுத்து விடுவது என்கிற பாலிசியை கடைபிடித்து வந்தாராம். ஆனால் அப்படி இருந்து வந்த குஷ்பு, பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த வில்லு படத்திற்காக மட்டும் ஒரேயொருநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று அரிதாரம் பூசி நடித்தாராம்.

இதை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள குஷ்பு. விஜய், பிரபுதேவாவுக்காக மட்டுமே அந்த தியாகத்தை செய்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions