விஜய் படத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை – பிரபல தயாரிப்பாளர் வருத்தம்!

Bookmark and Share

விஜய் படத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை – பிரபல தயாரிப்பாளர் வருத்தம்!

கோவை சாந்தி தியேட்டரில், ஒரு பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் தெறி படத்தின் 30 நிமிட காட்சியை முதல் நாள் முதல் காட்சியில் வீடியோவாக பதிவு செய்ததாகவும் அதை கண்டறிந்த தியேட்டர் ஊழியர்கள் அவர்களை போலீசிடம் பிடித்து கொடுத்ததாகவும் நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தற்போது பேசியுள்ள பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதிஷ், ” நான் தயாரித்த ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்தையும் இதே போன்று தான் திருநெல்வேலியில் ஒரு தியேட்டரில் படம்பிடித்து டிவிடியாக வெளியிட்டனர்.

அவர்களை நான் உடனடியாக போலீசிடம் ஒப்படைத்தேன். ஆனால் ஒரேநாளில் அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள். ஆனால் தெறி படத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை.

பெரிய படங்களுக்கு ஒரு முறையிலும் சின்ன படங்களுக்கு ஒரு முறையிலும் ஏன் நடந்துகொள்ள வேண்டும். இதேபோன்று எல்லா படங்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் நல்லது” என வருத்தத்துடன் பேசினார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions