படப்பிடிப்புக்காக நடுக்காட்டில் தங்கிய விஜய்!

Bookmark and Share

படப்பிடிப்புக்காக நடுக்காட்டில் தங்கிய விஜய்!

விஜய் நடித்த புலி படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு கேமராவை ஓரங்கட்டி வைத்து விட்டு மேக்கப் போட்டு கேமரா முன் நின்று கொண்டு இருக்கிறார் நட்டி என்கிற நட்ராஜ். நடிக்கப் போன இடத்தில் சதுரங்க வேட்டை பற்றி பாராட்டுகிறார்களாம்.

மிளகா முத்துக்கு முத்தாக படங்களையும் நினைவில் வைத்துப் பேசுகிறார்களாம். விஜய்யின் புலி படம்பற்றியும் கேள்வி கேட்டுத் துளைத்து எடுக்கிறார்களாம்.

புலி படப்பிடிப்பு ஆந்திரா தலக்கோணம் காட்டுப் பகுதியில் நடந்தபோது அங்குள்ள சாதாரண வீட்டில் தான் தங்கியபோது ஓட்டலுக்குப் போய் வந்தால் நேரமாகும் என்று அங்கேயே விஜய்யும் தங்கியது பற்றி ஆச்சரியப்படுகிறார் நட்டி.. நட்டநடுக் காட்டில் நட்டியுடன் விஜய் தங்கியிருந்த அனுபவம் புதியது என்கிறார்.

ஒளிப்பதிவாளாக இருந்து கொண்டு தான் நடிப்பது சரியா, தன்னை ஏற்றுக் கொள்வார்களா தனக்கு நடிப்பு வருகிறதா என்கிற குழப்பமான கேள்விகளுடன்தான் இதுவரை நட்டி இருந்திருக்கிறார். ஆனால் சதுரங்க வேட்டையின் வெற்றி அவருக்கு நல்ல அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

பார்க்கிற பார்வையாளர்கள் சதுரங்க வேட்டையைப்போல கதையைத் தேர்ந்தெடுத்து நடியுங்கள் என்றதுடன், தாங்கள் ஏமாந்த கதையையும் கூற ஆரம்பித்து விடுகிறார்களாம். பரவாயில்லை அறிமுகநிலையிலேயே நடிப்பில் பாஸ் மார்க் வாங்கிய உணர்வு வந்து இருக்கிறதாம் நட்டிக்கு.


Post your comment





Related News
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
தல-59 படத்தை தயாரிக்கும் ஐடியா இல்லை, அது வதந்தி தான் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்.!
அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!
தெறி பாடல்கள் செம ஹிட்: கொண்டாடும் ரசிகர்கள்
தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி டப்பிங் பணிகளை முடித்த சமந்தா!
அஜித்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்!
ரசிகர்களுடன் நடிகர் விஜய் ரகசிய ஆலோசனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions