உடைந்த 2 கட்சிகளை சேர்த்து வைத்த விஜய்!

Bookmark and Share

உடைந்த 2 கட்சிகளை சேர்த்து வைத்த விஜய்!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் புலி. சரித்திர கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் புலி என்ற கேரக்டரில் விஜய் நடிக்கிறார். தமிழ்நாடு, கேரளா ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் உள்ள தலக்கோணத்தில் நடைபெற்று வருகிறது.

அதற்கு காரணம், புலி படத்தின் கதையின் சில பகுதி ஆந்திராவில் நடப்பது போலவே உள்ளது. அதனால் விஜய் அரசர் காலத்து இளவரசன் கெட்டப்பில் நடிக்க, அவருடன் நடித்திருப்பவர்கள் ஆந்திராக்காரர்கள் அணிவது போன்ற உடைகளை அணிந்து நடித்துக்கொண்டிருக்கின்றனர்.

மேலும், இந்த காட்சிகளுக்காக 2 கோடி செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாம். அந்த காலத்து ராஜாக்கள் தங்கியிருக்கும் கெஸ்ட்ஹவுஸ் போன்று உருவாக்கப்பட்டுள்ள அந்த செட்டில், ஒரு மிகப்பெரிய பாலமும் உள்ளதாம். ஒரு கட்டத்தில் அந்த பாலம் ஒரு பிரச்சினையில் இடித்து நொறுக்கப்பட, அந்த மக்களிடையே விரிசல் ஏற்படுகிறதாம்.

ஆக, ஆளுக்கொரு கட்சியை ஆரம்பித்து போர்க்கொடி பிடித்து வருவார்களாம். அப்போது இளவரசரான விஜய் அதில் தலையிட்டு அவர்களை ஒன்று சேர்த்து வைப்பாராம்.

அந்த சூழலில் ஒரு அதிரடியான பாடலும் உள்ளதாம். ஆக, புலி படத்துக்காக உடைந்த கட்சிகளையும், மக்களையும் ஒன்று சேர்த்து விஜய் பாடும் பாடல் தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். 

 


Post your comment





Related News
அட்லீ, விஜய் படத்தில் புலி படத்தின் கனெக்ஷனா- மாஸ்டர் பிளான் போட்ட தயாரிப்பாளர்
கிண்டல் செய்தவரையும் பாராட்டி மனம் உருகவைத்த விஜய்!
விக்ரமிற்கு உதவி செய்த விஜயின் தயாரிப்பாளர்
தன்னை மையப்படுத்தி உருவான ‘எபிக் க்ளாஷ்’ கேம்மை கண்டு வியந்த விஜய்
இளைய தளபதி விஜய்யின் புதிய மொபைல் கேம்' எபிக் க்ளாஷ்'
தல நடித்திருந்தால் புலி படம்? அஜித்தை தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்
இளையதளபதி விஜய்க்கு மாஸ் ஓப்பனிங் கொடுக்க அட்லீ புதிய திட்டம்
தல குறித்த விஜய் ரசிகர்களின் குற்றச்சாட்டு… உடனே பதிலடி கொடுத்த அஜீத் ரசிகர்கள்
விஜய் ரசிகனாக புலிப் படத்தை பார்க்க துடிக்கும் நாமல் ராஜபக்சே…!
வரி ஏய்ப்பு செய்யவில்லை: நடிகர் விஜய் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions