புலிக்காக விஜய்யுடன் இணைந்து பாடிய ஸ்ருதிஹாசன்...!

Bookmark and Share

புலிக்காக விஜய்யுடன் இணைந்து பாடிய ஸ்ருதிஹாசன்...!

ஒரு நடிகராக மட்டுமல்லாது சிறந்த பாடகராகவும் இருப்பவர் விஜய். தனது ஆரம்பகால படங்களில் இருந்தே பாடி வந்த விஜய் சில ஆண்டு இடைவௌிக்கு பிறகு கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த துப்பாக்கி திரைப்படத்தில், கூகுள் கூகுள்.. என்ற பாடலை பாடினார்.

அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதை தொடர்ந்து தான் நடித்த அடுத்தடுத்த படங்களான தலைவா, ஜில்லா, கத்தி ஆகிய படங்களிலும் நடிகர் விஜய் தொடர்ந்து தனது சொந்த குரலில் பாடினார்.

கூகுள் கூகுள், வாங்கண்ணா வணக்கங்கண்ணா, கண்டாங்கி கண்டாங்கி, செல்ஃபி புள்ள ஆகிய நான்கு மாபெரும் ஹிட் பாடல்களை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்போடு விரைவில் வெளியாக இருக்கும் புலி திரைப்படத்திலும் அவர் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் திரையில் நடிகர் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் ஸ்ருதிஹாசனும் அவருடன் சேர்ந்து இந்த பாடலை பாடியுள்ளார்.

ப்ளாக் அண்ட் வைட் காலகட்டத்திற்கு பிறகு நாயகன் நாயகி இருவருமே பின்னணி பாடலை பாடி திரையில் நடித்தும் இருப்பது ஒரு மைல்க்கல். ஆதலால் ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாது திரை உலகத்தினர் மத்தியிலும் இந்நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions