கிராம மக்களை ஆச்சர்யப்படுத்திய விஜய்

Bookmark and Share

கிராம மக்களை ஆச்சர்யப்படுத்திய விஜய்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு கடைசியாக தாய்லாந்தில் உள்ள புலி கோவில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். படப்பிடிப்பின்போது நடிகர், நடிகைகள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில், படப்பிடிப்பின் போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்களும் தற்போது வெளியாகி வருகிறது. அதாவது, ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம் தலக்கோணம் பகுதியிலும் நடைபெற்றது. அங்குள்ள அடர்ந்த காட்டுக்குள் இந்த படப்பிடிப்பை நடத்தினர். கிட்டத்தட்ட 40 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடந்தது.

பெரும்பாலும் வெளியூர்களில் படப்பிடிப்பு என்றால், விஜய் நட்சத்திர ஓட்டல்களில்தான் தங்குவார். ஆனால், இந்த படப்பிடிப்பின்போது விஜய், எந்த நட்சத்திர ஓட்டலுக்கும் செல்லாமல், அந்த பகுதி கிராம மக்களின் வீட்டிலேயே தங்கினாராம். மேலும், அந்த பகுதி மக்களுடன் அன்பாக பேசி, ரொம்பவும் ஜாலியாக இருந்துள்ளார்.

இது அந்த பகுதி மக்களை ரொம்பவும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. இவ்வளவு பெரிய நடிகர் தங்களிடம் இவ்வளவு சாதாரணமாக பழகுகிறாரே? என்று அனைவரும் அவரை பார்த்து வியந்து போயுள்ளனர்.

மேலும், அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்திவிட்டு கிளம்பும்போது, விஜய் அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி அந்த பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாராம். 


Post your comment





Related News
அட்லீ, விஜய் படத்தில் புலி படத்தின் கனெக்ஷனா- மாஸ்டர் பிளான் போட்ட தயாரிப்பாளர்
கிண்டல் செய்தவரையும் பாராட்டி மனம் உருகவைத்த விஜய்!
விக்ரமிற்கு உதவி செய்த விஜயின் தயாரிப்பாளர்
தன்னை மையப்படுத்தி உருவான ‘எபிக் க்ளாஷ்’ கேம்மை கண்டு வியந்த விஜய்
இளைய தளபதி விஜய்யின் புதிய மொபைல் கேம்' எபிக் க்ளாஷ்'
தல நடித்திருந்தால் புலி படம்? அஜித்தை தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்
இளையதளபதி விஜய்க்கு மாஸ் ஓப்பனிங் கொடுக்க அட்லீ புதிய திட்டம்
தல குறித்த விஜய் ரசிகர்களின் குற்றச்சாட்டு… உடனே பதிலடி கொடுத்த அஜீத் ரசிகர்கள்
விஜய் ரசிகனாக புலிப் படத்தை பார்க்க துடிக்கும் நாமல் ராஜபக்சே…!
வரி ஏய்ப்பு செய்யவில்லை: நடிகர் விஜய் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions