இணையத்தில் வெளியான புலி புகைப்படங்கள்

Bookmark and Share

இணையத்தில் வெளியான புலி புகைப்படங்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படம் வினாயகர் சதுர்த்தி அன்று வெளிவர உள்ளதாக சொல்லப்படுகிறது. புலி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இம்மாதம் 21 அன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்றும், படத்தின் டீசர் மறுநாள் 22 அன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்றும் விஜய் தரப்பில் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரபல வாரப்பத்திரிகைக்கு மட்டும் புலி படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த யாரோ சிலர் புலி படத்தின் புகைப்படங்களை இணையத்தில் உலவவிட்டுவிட்டனர். இணையத்தில் புலி படத்தின் புகைப்படங்கள் வெளியானதும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களிலும் தீயாய் பரவியது. அதோடு வாட்ஸ்அப்பிலும் பரவியது. இந்த விஷயத்தை அறிந்ததும் லண்டனில் உள்ள விஜய் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து சிம்புதேவனிடம் தன் அதிருப்தியை தெரிவித்தாராம். கடந்த சில வருடங்களாகவே தான் நடிக்கும் படத்தின் புகைப்படங்களை வெளியிடுவதற்கு முன் தன்னிடம் காட்டி அப்ரூவல் வாங்க வேண்டும் என்பதை கடுமையாக பின்பற்றி வருகிறார். இதற்கு மாறாக தன்னிடம் கேட்காமலே புலி படத்தின் புகைப்படங்களை குறிப்பிட்ட பத்திரிகைக்கு ஏன் கொடுத்தீர்கள் என்றும் சிம்புதேவனிடம் கேட்டிருக்கிறார் விஜய்.


Post your comment





Related News
அட்லீ, விஜய் படத்தில் புலி படத்தின் கனெக்ஷனா- மாஸ்டர் பிளான் போட்ட தயாரிப்பாளர்
கிண்டல் செய்தவரையும் பாராட்டி மனம் உருகவைத்த விஜய்!
விக்ரமிற்கு உதவி செய்த விஜயின் தயாரிப்பாளர்
தன்னை மையப்படுத்தி உருவான ‘எபிக் க்ளாஷ்’ கேம்மை கண்டு வியந்த விஜய்
இளைய தளபதி விஜய்யின் புதிய மொபைல் கேம்' எபிக் க்ளாஷ்'
தல நடித்திருந்தால் புலி படம்? அஜித்தை தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்
இளையதளபதி விஜய்க்கு மாஸ் ஓப்பனிங் கொடுக்க அட்லீ புதிய திட்டம்
தல குறித்த விஜய் ரசிகர்களின் குற்றச்சாட்டு… உடனே பதிலடி கொடுத்த அஜீத் ரசிகர்கள்
விஜய் ரசிகனாக புலிப் படத்தை பார்க்க துடிக்கும் நாமல் ராஜபக்சே…!
வரி ஏய்ப்பு செய்யவில்லை: நடிகர் விஜய் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions