விஜய்க்கு குவியும் வாழ்த்துகள்

Bookmark and Share

விஜய்க்கு குவியும் வாழ்த்துகள்

இன்று தன்னுடைய 42வது பிறந்த நாளைக் கொண்டாடும் விஜய்க்கு டிவிட்டரில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஒரு பக்கம் பல நட்சத்திரங்கள் அவருக்கு வாழ்த்துகளைச் சொல்லிக் கொண்டிருக்க, மறுபக்கம் அவருடைய ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். #HBDDearVIJAY என்ற ஹேஷ்டேக்குடன் விஜய்க்கு தெரிவிக்கும் வாழ்த்துகள் டிவிட்டர் டிரென்டிங்கில் நேற்றிலிருந்தே முன்னணியில் இருந்து கொண்டிருக்கிறது.

விஜய்யுடன் நடித்தவர்கள், நடிக்காதவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். டிவிட்டர் பக்கத்தைத் திறந்தாலே ஒரே வாழ்த்து மழையாகவே உள்ளது. 1992ம் ஆண்டு வெளிவந்த நாளைய தீர்ப்பு படம் முலமாக 18 வயதிலேயே நாயகனாக அறிமுகமானவர் விஜய். தொடர்ந்து செந்தூரப்பாண்டி, ரசிகன்” ஆகிய படங்கள் விஜய்யை படிப்படியாக உயர்த்தின.

அடுத்து சில சுமாரான படங்களில் நடித்த விஜய்க்கு விக்ரமன் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளிவந்த பூவே உனக்காக படம் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் அவர் நடித்த பல காதல் திரைப்படங்களான லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும்” ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

அடுத்து சில தோல்விப் படங்களைக் கொடுத்தாலும் மீண்டும் குஷி படம் மூலம் எழுந்து நின்றார். அதன் பின் தொடர்ச்சியாக பிரியமானவளே, பிரண்ட்ஸ், பத்ரி, ஷாஜகான்,  யூத்” ஆகிய காதல் படங்கள் அவரை முன்னணிக்குக் கொண்டு வந்தன. அடுத்து பகவதி படத்தில் ஆக்ஷன் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். திருமலை படம் அவரை முழு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது. அதன் பின் வெளிவந்த கில்லி படம் மிகப் பெரும் வெற்றி பெற்ற வசூல் சாதனை படைத்தது. அதன் பின் வெளிவந்த திருப்பாச்சி படம் பாக்ஸ்-ஆபீசில் விஜய்க்கென தனி இடத்தைத் தேடிக் கொடுத்தது.

போக்கிரி, வேட்டைக்காரன், காவலன், வேலாயுதம், நண்பன், துப்பாக்கி, தலைவா, ஜில்லா, கத்தி என அதன் பின் தன்னுடைய கிராஃபை கீழிறக்காமல் கவனமாக நடித்து வருகிறார் விஜய். 

தற்போது அவர் நடித்து வெளிவர உள்ள புலி படம் தமிழ்த் திரையுலகில் சரித்திரப் படங்களுக்கு ஒரு தனி பாதையைப் போட்டுக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க விஜய்க்கு நமது வாழ்த்துகள்.


Post your comment





Related News
அட்லீ, விஜய் படத்தில் புலி படத்தின் கனெக்ஷனா- மாஸ்டர் பிளான் போட்ட தயாரிப்பாளர்
கிண்டல் செய்தவரையும் பாராட்டி மனம் உருகவைத்த விஜய்!
விக்ரமிற்கு உதவி செய்த விஜயின் தயாரிப்பாளர்
தன்னை மையப்படுத்தி உருவான ‘எபிக் க்ளாஷ்’ கேம்மை கண்டு வியந்த விஜய்
இளைய தளபதி விஜய்யின் புதிய மொபைல் கேம்' எபிக் க்ளாஷ்'
தல நடித்திருந்தால் புலி படம்? அஜித்தை தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்
இளையதளபதி விஜய்க்கு மாஸ் ஓப்பனிங் கொடுக்க அட்லீ புதிய திட்டம்
தல குறித்த விஜய் ரசிகர்களின் குற்றச்சாட்டு… உடனே பதிலடி கொடுத்த அஜீத் ரசிகர்கள்
விஜய் ரசிகனாக புலிப் படத்தை பார்க்க துடிக்கும் நாமல் ராஜபக்சே…!
வரி ஏய்ப்பு செய்யவில்லை: நடிகர் விஜய் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions