மெர்சல் படத் தலைப்பு மாற்றமா? படத்திற்கு விதிக்கப்பட்ட தடை விலகியதா?

Bookmark and Share

மெர்சல் படத் தலைப்பு மாற்றமா? படத்திற்கு விதிக்கப்பட்ட தடை விலகியதா?

தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த படத்திற்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி மெர்சலாயிட்டேன் பட தயாரிப்பாளர் மெர்சல் என்னுடைய தலைப்பு என வழக்கு தொடர்ந்ததால் மெர்சல் என்ற தலைப்பை விளம்பரங்களில் பயன்படுத்த அக்டோபர் 3-ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு அக்டோபர் 3-ம் தேதி விசாரணைக்கு வந்தது, வலக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) அறிவிக்கப்படும் என கூறி வழக்கை ஒத்தி வைத்துள்ளார். இதனால் படத்தின் தலைப்பு மாற்றப்படுமா? அல்லது மெர்சல் என்ற தலைப்பே தொடருமா என்பது நாளை தான் தெரிய வரும்.

 எதிர்பாராத விதமாக தலைப்பை மாற்ற நேர்ந்தால் ஆளப்போறான் தமிழன் என்ற வாசகத்தையே தலைப்பாக வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions