பிறந்தநாளை முன்னிட்டு விஜய்க்கு மொட்டை ராஜேந்திரன் வாழ்த்து!

Bookmark and Share

பிறந்தநாளை முன்னிட்டு விஜய்க்கு மொட்டை ராஜேந்திரன் வாழ்த்து!

நாளை பிறந்தநாள் கொண்டாட உள்ள விஜய்க்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இன்று முதலே வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் வில்லனாக அறிமுகமாகி தற்போது காமெடியால் ரசிகர்களை கவர்ந்து வரும் மொட்டை ராஜேந்திரன் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

மொட்டை ராஜேந்திரன் கூறும்போது, ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால், ஒரே ஒரு இளைய தளபதி அது விஜய்தான். என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘தெறி’ படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு டிரைவராகவும், உதவியாளராகவும் மொட்டை ராஜேந்திரன் நடித்திருந்தார். இதில் விஜய், மொட்டை ராஜேந்திரன் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions