விஜய், ரஜினியை தொடர்ந்து அதர்வாவும்...?!

Bookmark and Share

விஜய், ரஜினியை தொடர்ந்து அதர்வாவும்...?!

விஜய், ரஜினியை தொடர்ந்து அதர்வாவும், தண்ணீர் பிரச்னையை கையில் எடுத்துள்ளார். மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா. பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர், பாலாவின் பரதேசி படத்தின் மூலம் அனைவரின் பாராட்டை பெற்றார்.

ஆனால் அதன்பின்னர் அவர் நடித்த இரும்புக்குதிரை படம் சரியாக போகவில்லை. அதனால் ஒரு வெற்றியை கொடுக்க தீவிரமாக உழைத்து வருகிறார். தற்போது ஈட்டி, கணிதன் மற்றும் சண்டிவீரன் படங்களில் நடித்து வருகிறார் அதர்வா.

இதில் சண்டிவீரன் படம், பாலா தயாரிப்பில், சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ளது. அதர்வா ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் முடிந்தது.

இந்நிலையில், இப்படத்தின் கதை எப்படிப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தண்ணீர் பிரச்னையை மையமாக வைத்து ’சண்டிவீரன்’ படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் வெளியான விஜய்யின் கத்தி படமும், ரஜினியின் லிங்கா படமும் தண்ணீர் பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்போது அந்த வரிசையில் அதர்வாவின் படமும் தண்ணீர் பிரச்னையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

மேலும் இப்படம் நிச்சயம், அதர்வாவுக்கு ஒரு திருப்புமுனை தரும் படமாக இருக்கும் என்கிறார்கள். தற்போது படத்தின் போஸ்ட் புரொடாக்ஷன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் எல்லாம் முடிந்த பின்னர் ஏப்ரலில் இசை வெளியீடும், அதைதொடர்ந்து படமும் ரிலீஸாகும் என்கிறார்கள்.


Post your comment





Related News
பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா? ரஜினியை முந்திய விஜய்
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
தீபாவளிக்கு தலைவர்; அப்போ தளபதி எப்போ வர்றார்?
ஒரே மாதத்தில் விருந்து வைக்கும் விஜய், ரஜினி!
ஒரே மாதத்தில் விஜய் மற்றும் ரஜினி!
நடிகர் விஜய், சிவகார்த்திகேயன் தங்களது வாக்கை பதிவு செய்தனர்
தொடர்ந்து வரவிருக்கும் படங்களால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்
அஜித், ரஜினி பட சாதனையை முறியடித்த புலி
தெலுங்கிலும் புகழ் பெற விஜய் ஆசை...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions