தொடர்ந்து வரவிருக்கும் படங்களால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

Bookmark and Share

தொடர்ந்து வரவிருக்கும் படங்களால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

தமிழ்சினிமாவின் ஹீரோக்கள் பிஸியாக இருக்கிறார்கள் எனவே தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ், விஷால், ஆர்யா, சிம்பு, கார்த்தி என அனைத்து முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களும் தற்போது பரபரப்பாக தயாராகி வருகின்றன.

இதுபோன்ற சூழ்நிலை முன் எப்போதும் இல்லை என்கிற அளவுக்கு, ரஜினி தன் கபாலி பட வேலைகள், கமல் நடித்த தூங்காவனம் போஸ்ட்புரடக்ஷன்ஸ் பணிகள் என்று பரபரப்பாகயிருக்கிறது. விஜய் புலி படத்தை முடித்துவிட்டு, அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அஜித் சிவா இயக்கும் தல 56 படத்தில் பிஸியாக உள்ளார்.

சூர்யா 24 படத்தில் பிஸியாக இருக்க, அவரது தம்பி கார்த்தியோ காஸ்மோரா படத்தில் நடித்து வருகிறார். விக்ரம் 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் தன் சொந்தப்படத்தில் பிஸி.

விஜய்சேதுபதி வழக்கம்போல் நான்கைந்து படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார். இஞ்சிஇடுப்பழகி உட்பட சில படங்களில் ஆர்யா நடித்து வருகிறார்.

விஐபி 2 படத்தை முடித்துவிட்டு பிரபுசாலமன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். தொடர்ந்து இரண்டு படங்கள் வரிசையில் உள்ளன. இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, கான் படங்களில் சிம்பு பிஸி. இப் படங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும்போது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions