நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்

Bookmark and Share

நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்

ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஷ்வந்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார். நடிகரும், இயக்குனருமான ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்துக்கும், ப்ரியங்காவுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு விஜய் வந்திருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஃப்ரெண்ட்ஸ் படத்தில் தனது நண்பனாக நடித்த ரமேஷ் கண்ணாவின் வீட்டு விசேஷத்தில் விஜய் மிகவும் சிம்பிளாக கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

ரமேஷ் கண்ணாவின் மகனை விஜய் வாழ்த்தியபோது எடுத்த புகைப்படங்களை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

ரமேஷ் கண்ணா மகன் திருமண வரவேற்பில் விஜய் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. 

விஜய்யிடம் அவரின் ரசிகர்களுக்கு பிடித்தது இரண்டு விஷயம். ஒன்று அவரின் எளிமை, மற்றொன்று அவரின் ஸ்மைல். 


Post your comment





Related News
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தலவர்கள் இரங்கல்
பிரபல நடிகரின் மனைவிக்கு ஆபாச மெசேஜ்! பரபரப்பு புகார்
இமைக்கா நொடிகள்: அதர்வாவுக்கு ஜோடியான சித்தார்த் நாயகி
மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!
வாரிசை அறிமுகப்படுத்தும் வினோத் கன்னா
மாஸ் மகாராஜ் இரண்டு நாயகிகளுடன் நடனம்
ராமுடன் காதல் செய்ய வரும் டில்லி அழகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions