விஜய் படப்பிடிப்பில் ரோஜா!

Bookmark and Share

விஜய் படப்பிடிப்பில் ரோஜா!

தெலுங்கு நடிகையான ரோஜா, செம்பருத்தி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் ரஜினி,விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து உச்ச நடிகையாக வளர்ந்தார்.

அதோடு, தன்னை சினிமாவில் ஆளாக்கிய டைரக்டர் ஆர்.கே.செல்வமணியையே திருமணம் செய்து கொண்டார். மேலும், சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தபோதே அரசியல் கட்சிகளில் தன்னை இணைத்துக்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வந்த ரோஜா, சமீபகாலமாக ஆந்திராவில் எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டு வெற்றி பெறும் அளவுக்கு பெரிய அரசியல்வாதியாகி விட்டார்.

அதனால், தொகுதி மக்களுக்கு அங்கிருந்தபடியே சேவையும் செய்து வருகிறார். அதோடு, ரோஜாவுக்கு தெய்வ நம்பிக்கை அதிகம். அதனால் சக்திவாய்ந்த கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வரும் அவர், ஆந்திராவில் ஒரு லிங்கேஸ்வரன் கோயிலுக்கு தனது பெயரில் ஒரு மண்டபம் கட்டிக்கொடுத்திருக்கிறார்.

இப்படி ரோஜா மண்டபம் கட்டிக்கொடுத்து லிங்கேஸ்வரன் கோயிலில் சமீபத்தில் விஜய் நடித்து வரும் புலி படத்தின் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டிருக்கிறது. 4 வில்லன்களை விஜய் துரத்தி துரத்தி பந்தாடும் அந்த காட்சி அங்கு படமாக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக ஒருநாள் ரோஜாவும் அந்த கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தாராம். அப்போது அங்கு விஜய் படப்பிடிப்பு நடக்கிற சேதியறிந்து, ஸ்பாட்டுக்கு வந்து அவரை சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டு சென்றிருக்கிறார் ரோஜா.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions