ஆரம்பத்தில் அந்த விஷயத்தில் குறியாக இருந்த விஜய்?

Bookmark and Share

ஆரம்பத்தில் அந்த விஷயத்தில் குறியாக இருந்த விஜய்?

விஜய்க்கு ஒரு நல்ல பாதையை அமைத்து கொடுத்ததும் விஜயகாந்த் தான். அப்போது விஜயகாந்த் பெரிய ஹிரோ லிஸ்டில் இருக்க, சரியான அறிமுகம் இல்லைன்னா சினிமா வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடும் என பயந்து கொண்டிருந்த சந்திரசேகருக்கு ஆறுதலாக என்னுடைய படத்துலயே அறிமுகப்படுத்துங்க என்று கூறியவர் விஜய்காந்த்.

நாளைய தீர்ப்பு என்ற படத்தில் அறிமுகமான விஜய், அதனை தொடர்ந்து சினிமாவில் பாடகராகவும், சிறந்த நடனம் ஆடக்கூடியவராகவும் தன்னை மேம்படுத்திக் கொண்டிருந்தார்.

விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது குஷி, கில்லி, போக்கிரி ஆகிய படங்கள் தான். எப்பவுமே ஹிரோக்கள் நடனத்தில் அதிகமாக ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால் விஜய் மட்டும் நடனத்தில் குறியாக இருந்து அவரின் பெயரை தமிழ் சினிமாவில் நிலைக்க வைத்துவிட்டார். இப்படி விஜய் பிசியான சினிமா வாழ்க்கையில் இருந்தபோதும் ஏழைகளுக்கு உதவுவதிலும் பெரிய ஆர்வம் காட்டி வந்தார்.

அதன் தொடக்கமாக 2009 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் மக்களுக்காக நற்பணி செய்ய தொடங்கினார். ஏழை குழந்தைகளுக்கு படிப்பு, ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவினார். அதுமட்டுமின்றி விஜய் பிறந்த நாளுக்கு ஏதாவது ஒரு அரசு மருத்துவமனைக்கு சென்று அன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் போட்டு வாழ்த்தி வருவார்.

ஹிரோவாக நடித்தால் ஆக்‌ஷன் தான் முக்கியம் என்று இருந்த நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியவர் விஜய்தான். நடிகனுக்கு காமெடிதான் முக்கியம். டூயட் மற்றும் ஆக்‌ஷன் கூட எளிதில் செய்துவிடலாம், ஆனால் மக்களை சிரிக்க வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இதில் விஜய் எப்பவுமே தனித்து நின்றுதான் செயல்படுகிறார்.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
அடுத்த பட அறிவிப்பை விரைவில் வெளியிடும் விஜய்
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
பாடல் வீடியோ லீக் ஆனதால் அப்செட்டில் சர்கார் படக்குழு..!
தளபதி விஜய்யின் சர்கார் படத்தின் அடுத்த அப்டேட்- ரசிகர்களே தயாரா..?
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions