திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து காதலித்தால் இளமையாக இருக்கலாம்: விஜய்யின் தந்தை பேட்டி

Bookmark and Share

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து காதலித்தால் இளமையாக இருக்கலாம்: விஜய்யின் தந்தை பேட்டி

நடிகர்கள் ஜீவா, சிபிராஜ் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகியாக ஹன்சிகா நடித்துள்ள 'போக்கிரி ராஜா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா கோவையில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரி அரங்கில் நடந்தது. விழாவில் நடிகர் சத்யராஜ் படத்தின் பாடல் சி.டி.யை வெளியிட்டார். 

விழாவில் இசை அமைப்பாளர் டி.இமான், படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா, இயக்குனரும், நடிகருமான மனோபாலா, படத்தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார், காஸ்மோ சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியதாவது:- 

நான் காதலித்து திருமணம் செய்தவன். நான் காதலித்து திருமணம் முடித்து 50 ஆண்டுகள் ஆவதற்காக எனக்கும், எனது மனைவிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எங்களை மேடையில் ஏற்றி மோதிரம் மாற்றி, மாலை மாற்றி மீண்டும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

எனக்கு திருமணம் முடிந்து 43 ஆண்டுகள் ஆகிறது. திருமணத்துக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நான் எனது மனைவியை காதலித்து வந்தேன். அந்த வகையில் 50 ஆண்டுகளாக ஒரே மனைவியுடன் காதலித்து வாழ்ந்து வருகிறேன். 

காதலித்தவரையே திருமணம் செய்து, திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து காதலித்துக் கொண்டே இருந்தால், அது நம்மை எப்போதும் இளமையாக வைத்திருக்கும். சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்கும். உண்மையாக காதலித்து, காதலித்தவரையே கல்யாணம் செய்யுங்கள்.

போக்கிரிராஜா, சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றபடமாகும். அதே தலைப்பில் நடிகர்கள் ஜீவா, சிபிராஜ் நடித்த போக்கிரிராஜா நடித்த படமும் வெற்றிப்படமாக அமையும். 

நான் நடிகர் சத்யராஜ் தகடு தகடு என்று பேசிய காலத்தில் இருந்து அவருடைய ரசிகன். அவர் எனது மகன் விஜய்யின் ரசிகன். இந்த படத்தின் மூலம் சிபிராஜ் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

எனவே அவருக்கு இந்த படம் நல்ல பெயரை பெற்றுத் தரும். இந்த படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் உழைப்பால் உயர்ந்தவர். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார். 

 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions