“தெறி” படத்தை திருட்டுத்தனமான தியேட்டரில் பதிவு செய்த பாலிமர் டிவி ஊழியர்கள் கைது!

Bookmark and Share

“தெறி” படத்தை திருட்டுத்தனமான தியேட்டரில் பதிவு செய்த பாலிமர் டிவி ஊழியர்கள் கைது!

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் இன்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் படம் தெறி .

படம் வெளியான முதல் காட்சியில் இருந்தே படம் துப்பாக்கி படம் போன்று வித்தியாசமான படம் என ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் தெறி படம் வெளியாகியுள்ள கோவை சாந்தி அரங்கில் (திருப்பூர் சுப்பிரமணியன்) பாலிமர் டிவிக்காரர்கள் மூலம் தெறி படத்தின் 30 நிமிட வீடியோவைப் பதிவு செய்துள்ளனர்.

விஷயம் தெரிந்ததும் மோனிகா பிலிம்ஸ் செந்தில் போலீசாருக்கு தகவல் சொல்ல.. உடனடியாக திருட்டு வீடியோ பதிவு செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கமாக திருட்டு வீடியோ யாரோ ஒருவர்தான் எடுத்து வெளியிடுவார்கள் ஆனால் ஒரு பிரபல சேனல் எடுத்து இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions