உங்களுக்கு தெரியுமா? விஜய்-சங்கீதாவின் காதல் கதை

Bookmark and Share

உங்களுக்கு தெரியுமா? விஜய்-சங்கீதாவின் காதல் கதை

ஒரு நடிகரை பிடித்துவிட்டால் அவரை தன் குடும்பத்தில் ஒருவராகவே பார்ப்பவர்கள் தமிழ் ரசிகர்கள். அந்த வகையில் இளையதளபதி விஜய் கொஞ்சம் அதிர்ஷ்டசாலிதான். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அவருக்கு ரசிகர் பட்டாளம் மிக பெரியது.

காதலர் தின ஸ்பெஷலாக விஜய்யின் காதல் கதையை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

ரசிகையாக இருந்த சங்கீதாவையே காதலித்து அவர் திருமணமும் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

"‘பூவே உனக்காக' படத்தைப் பார்த்து விஜய்யோட தீவிர ரசிகை ஆயிட்டேன். அவரைப் பார்க்கிறதுக்காகவே லண்டனில் இருந்து கிளம்பி வந்துட்டேன். ரசிகைனு அறிமுகமாகி, நண்பர்களாகி, அப்புறம் காதலர்களானோம். அந்தச் சமயத்தில் விஜய் ‘காலமெல்லாம் காத்திருப்பேன்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியா இருந்தார். ஒருமுறை தன்னோட வீட்டுக்கு வரச்சொல்லி அழைச்சிருந்தார். விஜய்யோட அம்மா, அப்பா எல்லாருமே எங்கிட்ட நல்லா பழகினாங்க. விஜய்யைப் பார்க்க ரெண்டாவது முறை அவரோட வீட்டுக்குப் போனப்போ, அவரோட அப்பா எங்கிட்ட, 'விஜய்யை நீயும் திருமணம் செய்துகொள்ளுங்கள்'னு சொன்னார். இன்ப அதிர்ச்சியா இருந்தது. எல்லாரோட ஆசிர்வாத்தோடும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்."

(இது சங்கீதா சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியின் போது சொன்னது.)

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions