விரைவில் திருநெல்வேலி செல்லும் 'விஜய் 60' படக்குழு!

Bookmark and Share

விரைவில் திருநெல்வேலி செல்லும் 'விஜய் 60' படக்குழு!

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 60-வது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் கதை முழுக்க முழுக்க திருநெல்வேலியில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளதாம். எனவே சென்னை பின்னி மில்லில் திருநெல்வேலியில் உள்ள வீடுகளை போல் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

எனினும் திருநெல்வேலி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் சில முக்கிய காட்சிகள் படமாகவுள்ளதாம். இதற்காக படக்குழுவினர் விரைவில் திருநெல்வேலி செல்கின்றனர்.

இப்படம் ஆக்ஷன் கலந்த குடும்பம் சார்ந்த ஒரு படமாக உருவாகி வருகிறது. இதில் விஜய் ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

மேலும் சுகுமார் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions