ஹலோ... நான் பேய் பேசுறேன்! படத்தில் விஜய்சேதுபதி பாடல்

Bookmark and Share

ஹலோ... நான் பேய் பேசுறேன்! படத்தில் விஜய்சேதுபதி பாடல்

ஹீரோக்கள் சொந்தக்குரலில் பாடுவது புதிய விஷயமில்லை. பாடுவதற்கான இனிய குரல்வளம் இருக்கிறதோ இல்லையோ... கடந்த காலங்களில் கமல், ரஜினி உட்பட பல ஹீரோக்கள் சொந்தக்குரலில் பாடல்களைப் பாடி உள்ளனர். தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கும் பாடி இருக்கிறார் கமல்.

இந்த வழக்கம் இன்றைய இளம் ஹீரோக்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. தான் நடிக்கும் படங்களில் பாடுவது மட்டுமின்றி, மற்றவர்கள் நடிக்கும் படங்களிலும் பாடுகின்றனர். இந்த விஷயத்தில் சிம்பு அதிகபட்சமாக நிறைய பாடி இருக்கிறார்.

அனேகமாக விஜய்சேதுபதியும் இந்த பட்டியலில் இடம் பிடித்தாலும் ஆச்சர்யமில்லை. தற்போது அவர் தயாரித்து நடித்திருக்கும்  ஆரஞ்சு மிட்டாய் படத்தில் சொந்தக்குரலில் ஒரு பாடல் பாடி இருக்கிறார் விஜய்சேதுபதி. இப்பாடலைத் தொடர்ந்து  ஹலோ... நான் பேய் பேசுறேன்!' என்ற படத்திலும் ஒரு பாடல் பாடி இருக்கிறார் விஜய் சேதுபதி.

அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் மூலம் இயக்குனர் சுந்தர்.சி. தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாஸ்கர் இயக்கும் படம் இது. வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா புகழ் சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இவருடைய இசையில் உருவான பாடலை நடிகர் விஜய்சேதுபதி பாடிக் கொடுத்துள்ளார்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions