விஜய்சேதுபதிக்கு பதில் வடிவேலு நடித்திருந்தால்?

Bookmark and Share

விஜய்சேதுபதிக்கு பதில் வடிவேலு நடித்திருந்தால்?

சினிமாவில் யார் எப்போது எப்படி மேலே வருவார்கள் என்பதை யாராலுமே கணிக்க முடியாது. இவனெல்லாம் ஒரு ஆளா என துச்சமாக நினைக்கப்பட்ட எத்தனையோ பேர் இன்று நம்பர் ஒன்னாக இருக்கிறார்கள்.

இயக்குநர் நலன் குமாரசாமி குறும்பட இயக்குனராக இருந்தபோது வடிவேலுவை சந்தித்து கதை சொல்ல சென்றபோது அவரை சந்திக்க மறுத்திருக்கிறார் வடிவேலு. தன்னுடைய அறிமுகப்படமான  சூது கவ்வும் படத்தில் கதாநாயகனாக, தாஸ் என்ற 40 வயது கடத்தல்காரராக வடிவேலுவையே நடிக்க வைக்க எண்ணினாராம் நலன்குமாரசாமி. அப்போது வடிவேலு உச்சத்திலிருந்ததால், நலன்குமாராசாமியை பார்க்கக்கூட மறுத்துவிட்டாராம்.

வேறு வழியின்றி வேறொரு நாயகனை நடிக்க வைக்கலாம் என நினைத்து, கதையில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து விஜய்சேதுபதியை நடிக்க வைத்திருக்கிறார் நலன் குமாரசாமி.

வித்தியாசமான ஐந்து கட்டளைகளோடு கடத்தலைச் செய்யும் தாஸ் கேரக்டருக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஒருவேளை அன்றைக்கு தாஸ் கேரக்டரில் வடிவேலு நடித்திருந்தால் ஹீரோவாகவே அவருக்கு மிகப்பெரிய  பிரேக் கிடைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. எலி போன்ற படங்களில் நடித்து எனர்ஜியை வீண் அடித்திருக்க வேண்டியநிலையும் ஏற்பட்டிருக்காது.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions