நிம்மதி பெருமூச்சு விட்ட விஜயசேதுபதி!

Bookmark and Share

நிம்மதி பெருமூச்சு விட்ட விஜயசேதுபதி!

முன்னணி நடிகர்கள் ஒரே நேரத்தில் ஒரு படம் அல்லது இரண்டு படங்களில் நடிப்பதைத்தான் வழக்கமாகக் கொண்டு வருகிறார்கள். ஆனால் விஜயசேதுபதியோ ஒரே நேரத்தில் அரை டஜன் படங்களில் நடித்து வந்தார்.

அதனால் இத்தனை படங்களில் ஒரே நேரத்தில் எப்படி நடிக்கிறார் என்கிற கேள்விக்குறிதான் மற்ற நடிகர்களுக்கு எழுந்தது. அதோடு, நில்லாமல் புதிய படங்களில் கமிட்டாவதையும் அவர் நிறுத்தவில்லை.

மேலும் சில படங்களிலும் தற்போது ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆனால் ஏற்கனவே நடித்து வந்த நான்கு படங்களை தற்போது அவர் முழுமையாக முடித்துக் கொடுத்து விட்டாராம்.

அதில் இன்று வெளியாகும் ஆரஞ்சு மிட்டாய், இதைத் தொடர்ந்து செப்டம்பரில் இடம் பொருள் ஏவல், அக்டோபரில் மெல்லிசை, நவம்பரில் நானும் ரெளடிதான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன.

அதனால், இத்தனை படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேனா என்று சில சமயங்களில் மலைத்து வந்த விஜயசேதுபதி, இந்த படங்களை முடித்துக்கொடுத்து விட்டதால் இப்போது ஓரளவு ப்ரீயாகி விட்டாராம்.

இதை சமீபத்தில் தனது நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்த அவர், இந்த படங்களின் வேலையை முடித்து விட்டதை சொல்லி நிம்மதி பெருமூச்சு விட்டாராம். அதோடு, இனிமேல் ஒரே நேரத்தில் இவ்வளவு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தாராம்.


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions