எனக்கு எந்த பட்டமும் வேண்டாம்: விஜய் சேதுபதி

Bookmark and Share

எனக்கு எந்த பட்டமும் வேண்டாம்: விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. இப்படம் ஜூலை மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ரமேஷ் திலக், ஆறு பாலா, அர்ஷிதா, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தை பிஜு விஸ்வநாத் இயக்கி ஒளிப்பதிவு செய்து எடிட்டிங்கும் செய்திருக்கிறார். இப்படத்தை விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார். 

இப்படம் குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, ‘இப்படத்தின் கதையை முதலில் கேட்டபோது எனக்கு மிகவும் பிடித்தது. பின்னர், இப்படத்தை உருவாக்க தயாரிப்பாளர்களை தேடினோம். ஆனால், யாரும் தயாரிக்க முன் வரவில்லை. இதனால் நானே தயாரிக்க முடிவு செய்தேன். இதனால், காமன் மேன் பி.கணேஷுடன் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறேன்.

இப்படத்தில் நான் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் நடிக்கும்போது என் அப்பாவை ஞாபகப்படுத்தியது. ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற தலைப்பு, அனைவருக்கும் பிடிக்கும்.

குறிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கும் என்பதற்காக இந்த தலைப்பை வைத்தோம். எனக்கு ரசிகர் மன்றம் வைக்கும் எண்ணம் இல்லை. ஆனால் ரசிகர்கள்தான் ஆர்வமாக இருக்கிறார்கள். 

ரசிகர்கள் எனக்கு பட்டம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், எனக்கு எந்த பட்டமும் வேண்டாம். பட்டத்திற்கு எல்லாம் நான் இன்னும் தகுதியாகவில்லை” என்றார்.

மேலும் படம் பற்றிய பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions