ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை 400 கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுகிறார் வி.சத்யமூர்த்தி

Bookmark and Share

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை 400 கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுகிறார் வி.சத்யமூர்த்தி

தரமான திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது 'கிளாப்போர்ட் தயாரிப்பு நிறுவனம்'. இந்த நிறுவனத்தின் நிறுவனரான வி சத்யமூர்த்தி, தற்போது விஜய்சேதுபதி - கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள  'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை தமிழகமெங்கும் 400 கும் அதிகமான திரையரங்குகளில், வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடுகிறார்.

"இது வரை நான்   'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'  படத்தை பார்க்கவில்லை. ஏனென்றால் எனக்கு விஜய் சேதுபதி சார் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அதுமட்டுமின்றி, விஜய்சேதுபதி - கெளதம் கார்த்திக் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களாலும் வரவேற்கப்படும் என்று முழுமையாக நம்புகிறேன். 

 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'  படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு அடையாளத்தை பதிக்க இருக்கிறார் இயக்குநர் ஆறுமுக குமார். இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை 'மினிமம் காரண்ட்டி' முறையில் வாங்கி இருப்பது பெருமையாக இருக்கின்றது. வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி அனைவருக்கும் நல்ல நாளாக இருக்கும்..." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் - விநியோகஸ்தர் வி சத்யமூர்த்தி.

 


Post your comment





Related News
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions