பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு

Bookmark and Share

பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது,

எல்லாரும் கனவு காணுவாங்க, ஆனா நான் காணாத ஒரு கனவு நடந்தது, ரஜினி சாருடன் இணைந்து நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. அவர் கூட நடிச்சதே பெரிய விஷயம். அவர் கேமரா முன் வந்து நின்றால், அவரை பார்கக நிறைய பேர் இருக்காங்க. ரசிகர்களுக்காக இப்போ வரை அவர் பொறுப்புடன் நடிக்கிறார். அவரைப் போல பொறுப்பான நடிகராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

கார்த்திக் சுப்புராஜை ஷார்ட் பிலிம் பண்ணும் போதுல இருந்து தெரியும். ஷார்ட் பிலிம்லயே நிறைய சஸ்பென்ஸ் வைப்பாரு, அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யமா இருக்கும்.

இந்த படத்துலயும் அதே மாதிரியான காட்சிகள் நிறையவே இருக்கு. கடைசி காட்சி வரை எல்லாரையும் பிரமிக்க வைப்பாரு. பேட்டை படத்திலும் எல்லாம் இருக்கு, கடைசி வரை சுவாரஸ்யம் இருக்கு.

எப்பையமே பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும். நான் படத்தில் வில்லன் தான். மறுபடியும் ஜானுவ இங்கே பார்க்கிறேன். 
இவ்வாறு பேசினார். 


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions