அருவா மீசை விமல்! மீசையே இல்லாத விஜயசேதுபதி!!

Bookmark and Share

அருவா மீசை விமல்! மீசையே இல்லாத விஜயசேதுபதி!!

நடிகர்கள் விமல்-விஜயசேதுபதி இருவருமே கூத்துப்பட்டறையில் இருநது வந்தவர்கள். அதாவது, விமல், விதார்த் ஆகிய இருவரது நிஜ பெயரும் ரமேஷ். இவர்கள் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுத்து வந்தபோது அங்கு கணக்காளராக வேலை செய்தவர்தான் விஜயசேதுபதி.

அதையடுத்து, விமல், விதார்த் நடிக்க வந்தபோது, விஜயசேதுபதியும் குறும்படங்களில் நடித்தவர், பின்னர் சினிமாவில் சின்னச்சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

அப்படி வந்த அவர்கள் மூன்று பேருமே இப்போது சினிமாவில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறர்கள். இதில் கடைசியாக வந்த விஜயசேதுபதி மார்க்கெட்டில் முன்னணியில் இருந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், விமல், விஜயசேதுபதி இருவருமே எந்த சினிமா விழாக்களுக்கு தங்களை அழைத்தாலும் வீட்டில் ஒய்வாக இருக்கும்பட்சத்தில் மறுக்காமல் சென்று வருகிறார்கள்.

அந்த வகையில், கடந்த சில தினங்களாக சென்னையில் நடைபெறும் சில சினிமா விழாக்களில் விமல் விஜயசேதுபதி இருவரையும் ஜோடியாக பார்க்க முடிகிறது. ஆனால், அப்படி வரும்போது விமல் தான் நடித்து வரும் மாப்பிள்ளை சிங்கம் படத்தின் கெட்டப்பான அருவா மீசை கெட்டப்பில் வருகிறார்.

அதைப்பார்க்க சிங்கம் சூர்யாவை நினைவுபடுத்துகிறது. ஆனால், விஜயசேதுபதியோ, மீசையே இல்லாமல் வருகிறார். தற்போது ஒரே நேரத்தில் அவர் பல படங்களில் மாறி மாறி நடித்து வருவதால், மீசையை எடுத்து விட்டு அந்தந்த படங்களுக்கு தேவையானபடி ஒட்டு மீசையை வைத்து நடித்து வருகிறாராம்.


Post your comment





Related News
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions