நடிகர் விஜய் சேதுபதி மருத்துவமனையில் அனுமதி!

Bookmark and Share

நடிகர் விஜய் சேதுபதி மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் விஜய் சேதுபதி இப்போது, ‘தர்மதுரை’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை சீனுராமசாமி டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு தேனியில் நடைபெறுகிறது. போலீஸ் நிலையம் முன்பு ரவுடிகளுடன் விஜய் சேதுபதி மோதுவது போல் ஒரு சண்டை காட்சியை படமாக்கினார்கள். 

ஸ்டண்ட் நடிகர் ஒருவர் விஜய் சேதுபதியை ஓங்கி குத்துவது போல் நடித்தபோது, விஜய் சேதுபதியின் இடது கண்ணில் நிஜமாகவே குத்து விழுந்தது.

விஜய் சேதுபதி வலி தாங்காமல் அலறினார். அவருடைய இடது கண் முழுவதும் சிவப்பாக மாறியது. கண் வீங்க ஆரம்பித்தது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள். 

அவருக்கு டாக்டர்கள் அவசர சிகிச்சை அளித்து தூங்க வைத்தார்கள். தூங்கி விழித்த பிறகும் கண்ணில் பயங்கர வலி இருப்பதாக விஜய் சேதுபதி கூறியதால் அவரை மதுரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து போனார்கள்.

அங்கு அவருடைய கண் ‘எக்ஸ்ரே’ எடுக்கப்பட்டது. அதில் அவருடைய கண் நரம்பில் வீக்கம் இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள். 

சிகிச்சைக்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால், ‘தர்மதுரை’ படப்பிடிப்பு அன்று ரத்து செய்யப்பட்டது. மறுநாள் சிகிச்சை முடிந்து விஜய் சேதுபதி வீங்கிய கண்ணுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions