தரமான படங்களை தயாரிக்கும் விஜயசேதுபதி!

Bookmark and Share

தரமான படங்களை தயாரிக்கும் விஜயசேதுபதி!

சங்குதேவன் படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து நடித்த விஜயசேதுபதி, அதில் பிரச்சினை ஏற்பட்டதால் அந்த படத்தையே கிடப்பில் போட்டார்.

என்றாலும் அதன்பிறகு விஜயசேதுபதி புரொடன்சன்ஸ் என்றொரு பட நிறுவனத்தை தொடங்கி ஆரஞ்சு மிட்டாய், மேற்கு தொடர்ச்சிமலை ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.

அதோடு நில்லாமல், ஆரஞ்சு மிட்டாய் படத்துக்கு டயலாக்கும் எழுதியுள்ள அவர், ஒரு பாடலையும் எழுதி தனது சொந்தக்குரலிலேயே பாடுகிறாராம். முதலில் பாட வேண்டும் என்றதும் தயங்கிய விஜயசேதுபதி பின்னர் ஓகே சொல்லி விட்டாராம்.

இந்த படத்துக்கு பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார் மேலும், இப்போது விஜயசேதுபதி படங்கள் தயாரிக்கிறார் என்பதால், அவரிடம் கதை சொல்ல அவரது அலுவலகத்தை இயக்குனர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.

அப்படி பலர் வித்தியாசமான கதைகளாக கூறி வருவதால், காக்கா முட்டை போன்ற சில நல்ல தரமான கதையம்சம் உள்ள சிறிய பட்ஜெட் படங்களை புதுமுக நடிகர்களை வைத்து தயாரிக்கவும் தற்போது யோசித்துக்கொண்டிருக்கிறாராம் விஜயசேதுபதி.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions