‘மக்க கலங்குதப்பா’ பாடகர் மதிச்சயம் பாலாவின் மறுபக்கம்!

Bookmark and Share

‘மக்க கலங்குதப்பா’ பாடகர் மதிச்சயம் பாலாவின் மறுபக்கம்!

விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘தர்மதுரை’ படத்தில் இடம்பெற்ற ‘மக்க கலங்குதப்பா’ என்ற பாடலை பாடியவர் மதிச்சயம் பாலா. இவர், மதுரை மாவட்டம் மதிச்சயத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

கிராமங்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்களின் போது கும்மிப்பாட்டு பாடிக் கொண்டிருந்தவரை ஒரு திரையிசை பாடகராக அறிமுகப்படுத்தி அழகு பார்த்தது இயக்குனர் சீனு ராமசாமிதான்.

தன்னுடைய முதல் பாடலை அவருடைய உலகமான அம்மா-அப்பா கேட்கவேண்டும் என்பதுதான் இவரது ஆசை. ஆனால், சோகமான விஷயம் என்னவென்றால், அவரது அப்பா தற்போது உயிரோடு இல்லை. அவரது அம்மாவுக்கு காது கேட்காது. இருப்பினும், இவர் திரையில் பாடிய முதல் பாடலே இவ்வளவு பெரிய ஹிட்டானது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இவர் பாட்டுப் பாட உறுதுணையாக இருந்த அவரது ஆசான் வேலு மாமா, இயக்குனர் சீனுராமசாமி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கும் அவர் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions