புறம்போக்கு புரமோஷன் ரத்து...! விஜய்சேதுபதி காரணமா?

Bookmark and Share

புறம்போக்கு புரமோஷன் ரத்து...! விஜய்சேதுபதி காரணமா?

யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - புறம்போக்கு என்கிற பொதுவுடைமை. ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் ஆகியோரது நடிப்பில் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டபோது இப்படத்தின் பெயர் - புறம்போக்கு.

இந்த தலைப்புக்கு தணிக்கையில் ஏதாவது பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு என்பதால் தற்போது  புறம்போக்கு என்கிற பொதுவுடைமை என்று மாற்றி உள்ளனர்.

பேராண்மை படத்துக்குப் பிறகு பல வருட இடைவெளிக்குப் பிறகு ஜனநாதன் இயக்கும் படம் என்பதால் இந்தப்படத்துக்கு திரையுலகில் சின்னதாக எதிர்பார்ப்பு உள்ளது. ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் ஆகியோர் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியிலும் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

மே 1 ஆம் தேதி அன்று புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தை வெளியிட யுடிவி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக படத்தின் புரமோஷன் வேலைகளைத் தொடங்க திட்டமிட்டு குறிப்பிட்ட தேதியை தீர்மானித்தனர்.

குறிப்பிட்ட அந்த தேதியில் புரமோஷனுக்கு வர ஆர்யா, ஷாம் இருவரும் ஒப்புக்கொண்டுவிட்டனர். விஜய்சேதுபதி மட்டும் வர மறுத்துவிட்டாராம். அதுமட்டுமல்ல, புரமோஷனுக்கு வந்தால் என் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசிவிடுவேன் என்றும் எச்சரிகை செய்தாராம்.

என்னாச்சு.. விஜய்சேதுபதிக்கு? மூன்று ஹீரோக்கள் கதையில் மூன்று பேருக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்று சொன்ன இயக்குநர் ஜனநாதன் கடைசியில் விஜய்சேதுபதியை டம்மியாக்கியதுபோல் அவருடைய காட்சிகளை குறைத்துவிட்டாராம்.

டப்பிங் பேசும்போது இவ்விஷயம் விஜய்சேதுபதிக்கு தெரிய வந்ததும் கடுப்பாகிவிட்டாராம். அதனாலேயே புரமோஷனுக்கு வர முடியாது என்று சொல்லிவிட்டாராம்.


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions